2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

விராட் கோலியின் முதல் பதிவே வைரலானது

Editorial   / 2026 ஜனவரி 02 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2026-ம் ஆண்டு புத்தாண்டை துபாயில் மனைவி அனுஷ்காவுடன் கொண்டாடினார். விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் 2026-ம் ஆண்டில் விராட் கோலி தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி ஊதா நிற கோட்டும், அனுஷ்கா சர்மா அழகிய கருப்பு நிற உடையும் அணிந்துள்ளார். விராட் கோலி இந்த முதல் பதிவை வெளியிட்டதும் ரசிகர்கள் அதிக அளவிலான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

கிங் அண்ட் குயின், மிகவும் அழகான ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். புத்தாண்டுக்கு முந்தைய நாளில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது.

அந்த புகைப்படத்தில் விராட் கோலியின் முகத்தின் ஒருபுறத்தில் ஸ்பைடர் மேன் வரையப்பட்டும், அனுஷ்கா சர்மாவின் முகத்தில் கண்களைச் சுற்றி வண்ணத்துப் பூச்சி வரையப்பட்டும் இருந்தது. அந்தப் பதிவில், என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026 -ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X