Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் கூட்டமைப்பின் கடந்த 2015ஆம் ஆண்டுக்கான விருதை இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் லெய்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரரான றியாட் மஹ்ரேஸ் வென்றார்.
இந்தப் பருவகாலத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்காக 34 பிறிமியர் லீக் போட்டிகளில் விளையாடி 17 கோல்களைப் பெற்றதுடன் 11 கோல்களைப் பெறுவதற்கு உதவி புரிந்து லெய்செஸ்டர் சிற்றி இப்பருவகாலத்தில் பிறிமியர் லீக் பட்டத்தை கைப்பற்றுவதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
அல்ஜீரியா தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரரான றியாட் மஹ்ரேஸ்க்கு சக தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலேயே விருது வழங்கப்பட்டது.
25 வயதான றியாட் மஹ்ரேஸ், சக லெய்செஸ்டர் சிற்றி அணி வீரர்களான ஜேமி வர்டி, என்கலோ கன்டே, டொட்டேன்ஹாம் ஸ்பர்ஸ் அணியின் முன் கள வீரரான ஹரி கேன், ஆர்சனல் அணியின் மத்திய கள வீரர் மெசுட் ஒஸில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் டிமித்திரி பயெட் ஆகியோரை வெற்றிகொண்டே இவ்விருதை வென்றிருந்தார்.
இதேவேளை, பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள டொட்டேன்ஹாம் ஸ்பேர்ஸ் அணியின் மத்திய கள வீரரான 20 வயதான டெலே அல்லி, தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் கூட்டமைப்பின் வருடத்தின் இளம் வீரராக பெயரிடப்பட்டிருந்தார்.
14 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago