Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 05 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 37 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ள இந்திய அணி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்லின் அதிரடியால் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்துள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 37-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்து ஆடுவதற்கு தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ஓட்டங்களை குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் ரபாடா வீசிய பந்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்து தனது அரை சதத்தை தவறவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை எடுத்து விளையாடி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .