Shanmugan Murugavel / 2025 நவம்பர் 19 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், இலங்கை, சிம்பாப்வே பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமின் வனிது ஹசரங்க பின்தொடை தசைநார் காயமடைந்துள்ள நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அழைக்கப்பட்டுள்ளார்.
ஹசரங்க இதுவரையில் குழாமிலிருந்து வெளியேறவில்லை. பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் உபாதைக்குள்ளான ஹசரங்க, மூன்றாவது போட்டியைத் தவறவிட்டிருந்தார்.
கட்டாரில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை ஏ அணிக்காக விளையாடும் வியாஸ்காந்த், அங்கிருந்து நேரடியாக அணியில் இணைந்து கொள்ளவுள்ளார்.
ஹங்ஸூ ஆசியக் கிண்ணப் போட்டிகளில் 2023ஆம் ஆண்டு ஒரு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியிலேயே வியாஸ்காந்த் விளையாடியிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து 18 வயதில் லங்கா பிறீமியர் லீக்கில் 2020ஆம் ஆண்டு விளையாடியதன் மூலம் வியாஸ்காந்த் பிரபலமாகியிருந்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 லீக்கில் ஓகஸ்டில் வியாஸ்காந்தே இரண்டாவதாக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அணித்தலைவர் சரித் அசலங்கவையும் காய்ச்சல் காரணமாக இலங்கை தவறவிடுகின்ற நிலையில் தசுன் ஷானக அணித்தலைவராகக் கடமையாற்றவுள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago