2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விஸ்டனின் முன்னணி கிரிக்கெட் வீரராக பும்ரா

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஸ்டன் கிரிக்கெட் வீரர்கள் அகராதியின் 2025 பிரதியின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா புகழப்பட்டுள்ளார்.  

கடந்தாண்டு 71 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா, சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றுவதற்கு வழிவகுத்திருந்தார்.  

இதேவேளை முன்னணி வீராங்கனையாக இந்தியாவின் துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவாகியிருந்தார். கடந்தாண்டு 1,659 ஓட்டங்களை மந்தனா பெற்றிருந்தார்.  
உலகின் முன்னணி இருபதுக்கு - 20 வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டவீரரான நிக்கலஸ் பூரான் தெரிவாகியிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .