Editorial / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற அலாவேஸ் அணியுடனான போட்டியில் வென்ற அத்லெட்டிகோ மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட சில நிமிடங்களில், நடப்பு லா லிகா பருவகாலத்தில் தனது முதலாவது கோலை, சிமே விர்சாகோவிடமிருந்து பெற்ற பந்துப் பரிமாற்றத்தின் மூலம் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் பெர்ணான்டோ டொரஸ் பெற அக்கோலின் மூலம் குறித்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அலாவேஸ் அணியை அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றிபெற்றிருந்தது.
அந்தவகையில், இப்போட்டியுடன் சேர்த்து நான்கு போட்டிகளை லா லிகா தொடரில் தொடர்ச்சியாக வென்ற அத்லெட்டிகோ மட்ரிட், 36 புள்ளிகளைப் பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முதலிடத்தில் 39 புள்ளிகளுடன் காணப்படும் பார்சிலோனாவை விட மூன்று புள்ளிகளே குறைவாகப் பெற்றுள்ளது.
இதேவேளை, ஐபாரிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததோடு, கடந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது தோல்வியைப் பெற்ற வலென்சியா, 34 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது.
19 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago