Editorial / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற டொரினோவுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற நாப்போலி சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் நாப்போலி சார்பாக, கலிடு குலிபலி, பையோத்தர் ஸிலின்ஸ்கி, மரேக் ஹம்ஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரியா பெலோட்டி பெற்றார்.
இந்நிலையில், இன்டர் மிலன், 1-3 என்ற கோல் கணக்கில் உடினிஸிடம் தோல்வியைத் தளுவியது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெளரோ இகார்டி பெற்றதுடன், உடினிஸ் சார்பாக கெவின் லசக்னா, றொட்றிகோ டி போல், அன்டொனின் பராக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026