Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 09 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய குரான் பிறீயில், றெட் புல் அணியின் ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தி, நடப்பு போர்மியிலா வண் சம்பியனான மெர்சிடீஸ் அணியின் ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வென்றார்.
இன்றிரவு நடைபெற்ற குறித்த பந்தயத்தை முதலாமிடத்திலிருந்தே பிரித்தானியாவின் ஹமில்டன் ஆரம்பித்தபோதும், முதலாவது வளைவிலேயே பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனிடம் பறிகொடுத்திருந்தார்.
எவ்வாறெனினும், ஆறு சுற்றுகள் இருக்கத் தக்கதாக வெர்ஸ்டப்பனை முந்தி ஹமில்டன் வென்றார்.
பந்தயத்தில் மூன்றாமிடத்தைல், ஹமில்டனின் சக மெர்சிடிஸ் அணி ஓட்டுநரான பின்லாந்தின் வல்ட்டேரி போத்தாஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியிலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 94 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஹமில்டன் உள்ளார். 14 புள்ளிகள் குறைவாக 80 புள்ளிகளுடன் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago