2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெற்றிவாகை சூடிய வட்டுவாகல் உதயசூரியன்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு கால்பந்தாட்டத் தொடரில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

செந்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் இரணைப்பாலை சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேர முடிவு வரையில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், 5-4 என்ற ரீதியில் பெனால்டியில் வென்றே உதையசூரியன் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் டயான்சனும், தொடரின் நாயகனாக உதயசூரியனின் சி. இன்சாத்தும், சிறந்த கோல் காப்பாளராக உதயசூரியனின் பு. அஜித்தும் தெரிவாகினர். தொடரின் மக்கள் மனம்கவர் வீரராக பு. அபிசன் தெரிவானதோடு, தொடரின் சிறந்த அணியாக மாத்தளன் ஒற்றுமை விளையாட்டுக் கழகம் தெரிவானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .