2025 மே 19, திங்கட்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 2ஆவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 16 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கராச்சியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை 2 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பாகிஸ்தான், நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

களத்தில், மொஹமட் றிஸ்வான் 104, நெளமன் அலி ஓட்டமெதுவும் பெறாமல் காணப்பட்டிருந்தனர். முன்னதாக, அணித்தலைவர் பாபர் அஸாம் 196, அப்துல்லாஹ் ஷஃபிக் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், நேதன் லையன் 4, அணித்தலைவர் பற் கமின்ஸ் 2, கமரொன் கிறீன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 556/9 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா160, அலெக்ஸ் கெரி 93, ஸ்டீவ் ஸ்மித் 72, நேதன் லையன் 38, டேவிட் வோர்னர் 36, பற் கமின்ஸ் ஆ.இ 34, கமரொன் கிறீன் 28, ட்ரெவிஸ் ஹெட் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: பாஹீம் அஷ்ரஃப் 2/55, சஜிட் கான்ட் 2/167, நெளமன் அலி 1/134, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/95, ஹஸன் அலி 1/71, பாபர் அஸாம் 1/7)

பாகிஸ்தான்: 148/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 36, நெளமன் அலி ஆ.இ 20, இமாம்-உல்-ஹக் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/29, மிற்செல் ஸ்வப்ஸன் 2/32, நேதன் லையன் 1/13, கமரொன் கிறீன் 1/23, பற் கமின்ஸ் 1/39)

அவுஸ்திரேலியா: 97/2 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவஜா ஆ.இ 44, மர்னுஸ் லபுஷைன் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 1/21, ஹஸன் அலி 1/23)

பாகிஸ்தான்: 443/7 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம்196, மொஹமட் றிஸ்வான் ஆ.இ 104, அப்துல்லாஹ் ஷஃபிக் 96 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 4/112, பற் கமின்ஸ் 2/75, கமரொன் கிறீன் 1/32)

போட்டியின் நாயகன்: பாபர் அஸாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X