Shanmugan Murugavel / 2020 நவம்பர் 26 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை காலை 9.10 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரோஹித் ஷர்மா உபாதை காரணமாக குழாமில் இடம்பெறாதது இழப்பு என்றபோதும், ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், அணித்தலைவர் விராட் கோலி, மாயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்டிக் பாண்டியா, சஞ்சு சாம்ஸன், ஷுப்மன் கில் ஆகியோர் சிறந்த போர்மில் இருப்பதால் அவ்வணி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
பந்துவீச்சுப் பக்கமும் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி ஆகியோர் சிறப்பான போர்மில் இருப்பது இந்திய அணி தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்பை வழங்குகின்றது.
மறுபக்கமாக, அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் போர்மில்லாமல் தவிப்பது கவலையளிப்பதாய் உள்ளது எனினும், ஸ்டீவ் ஸ்மித், மர்னுஷ் லபுஷைன் ஆகியோரும் கிளென் மக்ஸ்வெல், அலெக்ஸ் காரி ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறு கிடைக்கப் பெறுகையில் இந்தியாவுக்கு சவாலாக அவுஸ்திரேலியா விளங்கும்.
இதேவேளை, பந்துவீச்சுப் பக்கம் மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், அடம் ஸாம்பா என அச்சுறுத்தலாயே அவுஸ்திரேலியா காணப்படுகிறது.
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago