2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

வெளிநாடுகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு வெளியேயான இருபதுக்கு – 20 லீக்குகளில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கான அனைத்து தடையில்லாச் சான்றிதழ்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது.

அறிவித்தலொன்றை திங்கட்கிழமை (29) அனுப்பிய கிரிக்கெட் சபையின்  பிரதான இயங்குநிலை அதிகாரி சுமைர் அஹ்மட் சயீட், முடிவை வீரர்கள், முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டதென காரணமெதுவும் வழங்கப்படவில்லை. பெறுபேறு அடிப்படையிலான திட்டமொன்றுடன் தடையில்லாச் சான்றிதழை கிரிக்கெட் சபை இணைக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், ஷடாப் கான், ஹஸன் அலி ஆகியோர் இப்பருவகாலத்தில் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக்கில் விளையாடவிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .