2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வெளியேறியது லிவர்பூல்

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியுடன் நேற்று  இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே இத்தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேறியிருந்தது. இப்போட்டியில் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களை ஜே றொட்றிகாஸ் பெற்றிருந்ததோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நியூபோர்ட் கவுண்டி அணிகளுக்கிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது. அந்தவகையில் இப்போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றதோடு, நியூபோர்ட் கவுண்டி சார்பாகப் பெறப்பட்ட கோலை பட்ரைக் அமொன்ட் பெற்றிருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .