2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வெளியேறுவதை உறுதி செய்த டொன்னருமா

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து தான் உடனடியாக வெளியேறுவதை அக்கழகத்தின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொன்னருமா உறுதிப்படுத்தியுள்ளார்.

பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கேயால் குழாமிலிருந்து நீக்கப்பட்டதையடுத்தே தான் வெளியேறுவதை 26 வயதான டொன்னருமா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டிக்கான குழாமிலிருந்து டொன்னருமாவை என்றிக்கே நீக்கியிருந்தார்.

கழகத்தில் 2021ஆம் ஆண்டு டொன்னருமா இணைந்திருந்தார்.

இன்னொரு லீக் 1 கழகமான லில்லியின் கோல் காப்பாளர் லூகாஸ் செவலியரை கடந்த வாரம் பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .