Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, அஞ்சலினோ, அமடெள ஹைதரா, ஜஸ்டின் குளூவேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் நடைபெற்ற குழு ஜி போட்டியொன்றில், அவ்வணியை 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும், வெஸ்டன் மக்கென்னி ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், விலகல் முறையிலான சுற்றுக்கு லேஸியோ தகுதிபெற்றது.
லேஸியோ சார்பாக, ஜோக்கின் கொரெரேரா, சிரோ இம்மொபைலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிளப் ப்ரூகே சார்பாக, ருட் வொர்மர், ஹன்ஸ் வனகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago