2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வெஸ்ட் ப்ரோமிடம் தோற்ற செல்சி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணிக்கும், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனுக்கும் இடையிலான போட்டியில், 2-5 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.

செல்சி சார்பாக, கிறிஸ்டியன் புலிசிச், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெஸ்ட் ப்ரோம் சார்பாக, மத்தெயுஸ் பெரைரா, கலும் றொபின்சன் ஆகியோர் தலா 2 கோல்களையும், எம்பயே டியக்னே ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாக, பெஞ்சமின் மென்டி, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, டியகோ ஜோட்டா இரண்டு கோல்களையும், மொஹமட் சாலா ஒரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .