Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
வெஸ்ட் ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜரோன் பெளவன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. வில்லா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்கோ அஸென்ஸியோ பெற்றதோடு, செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை என்ஸோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. இதில் பொரெஸ்டும், சிற்றியும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago