Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் வுகான் பகிரங்க தொடரில் விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா, கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இவ்வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற விம்பிள்டன் அரையிறுதிப்போட்டிக்கு பின்னர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, எந்தவொரு போட்டியிலும் பங்கேற்றிராத ஷரபோவா, இத்தொடரிலேயே முதன் முறையாகப் பங்கேற்றிருந்தார்.
தொடரைக் கைப்பற்றுபவர்களில் இரண்டாவதாகக் காணப்பட்ட ஷரபோவா, 6-7, 7-6 என்ற நிலையில் போட்டி இருந்து, தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 1-2 என்று இருந்தபோது போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
28 வயதான ஷரபோவா, தனது பிற்புறக் கையிலேயே பிரச்சினையைக் கொண்டு காணப்பட்டதுடன், போட்டியின் போக்கில் அது தீவிரமாகிச் சென்றதால், மேலும் அபாய நிலைக்குள் செல்லாமல் அவர் போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
சிங்கப்பூர் மற்றும் பெட் கிண்ணமே தனது பெரிய முன்னுரிமையாக இருப்பதாக தெரிவித்த ஷரபோவா, அதற்கு தயாராவதற்கு என்னாலான அனைத்தையும் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க பகிரங்க பயிற்சி அறையொன்றில் வழுக்கி விழுந்து தலை தாக்கப்பட்ட இகுனி போச்சார்ட், இத்தொடருக்காக பயிற்சியில் ஈடுபடும்போது அதிர்ச்சிகள் வெளிப்பட்டிருப்பதால் அவரும் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago