Shanmugan Murugavel / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சச்சின் டென்டுல்கர் தலைமையிலான சச்சின்ஸ் பிளாஸ்டர் அணிக்கும் ஷேன் வோண் தலைமையிலான வோண்ஸ் வொரியர்ஸ் அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 போட்டித் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியிலும், வோண்ஸ் வொரியர்ஸ் அணி வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களைக் குவித்த அவ்வணி, 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 129 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் இன்னமும் அதிகமாக ஓட்டங்களைப் பெறும் வாய்ப்பை இழந்தது.
துடுப்பாட்டத்தில் சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக சச்சின் டென்டுல்கர் 56 (27), சௌரவ் கங்குலி 50 (37), மஹேல ஜெயவர்தன 41 (18), கார்ள் கூப்பர் ஆட்டமிழக்காமல் 33 (22), விரேந்தர் செவாக் 27 (15) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் வோண்ஸ் வொரியர்ஸ் அணி சார்பாக, டானியல் விற்றோரி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பாகப் பந்துவீசிய ஜக்ஸ் கலிஸ், 3 ஓவர்களில் 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்தார்.
220 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வோண்ஸ் வொரியர்ஸ் அணி, முதலாவது பந்திலேயே விக்கெட்டை இழந்த போதிலும், தொடர்ச்சியாகப் போராடி, இறுதி ஓவரின் இறுதிக்கு முன்னைய பந்தில், வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஜக்ஸ் கலிஸ் 47 (23), றிக்கி பொன்டிங் 43 (25), குமார் சங்கக்கார 42 (21), அன்ட்ரூ சைமன்ட்ஸ் 31 (19) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக , கிறேம் ஸ்வான் 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக ஜக்ஸ் கலிஸூம் இத்தொடரின் நாயகனாக குமார் சங்கக்காரவும் தெரிவாகினர்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago