Shanmugan Murugavel / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் உலகில் பத்தாவது இடத்தை வகிக்கும் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரை வெல்பவர்களில் எட்டாவது இடத்தில் காணப்பட்டிருந்தாலும் முதலாவது சுற்றிலேயே பெரிய பிரித்தானியாவின் ஜொகன்னா கொன்டாவிடம் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து, மேற்படிப் போட்டிக்கு பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டைத் தவிர்த்தமை காரணமாக, 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். போட்டிக்கு பின்னரான, கட்டாயமான ஊடகவியலாளர் மாநாட்டைத் தவிர்ப்பதற்கான உயர்ந்தபட்ச அபராதமாக 20,000 அமெரிக்க டொலர்கள் இருக்கின்ற போதும், வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களில், மேற்படி அபராதம், அதிகமாகவே காணப்படுகின்றது வீனஸைத் தவிர, 2001ஆம் ஆண்டு பிரெஞ் பகிரங்கத் தொடரில் ஊடக கடப்பாடுகளைத் தவிர்த்ததற்காக, 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதே, வீராங்கனைகளுக்குள் விதிக்கப்பட்ட அபராதங்களுக்குள் அதிகமாக இருக்கின்றது.
இதேபோல், கடந்தாண்டு, பிரெஞ் பகிரங்கத் தொடரில், முதல் சுற்றில் தோற்று, தொடரிலிருந்து வெளியேறிய போட்டிக்கு பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டை புறக்கணித்தமை காரணமாக, வீனஸூக்கு, 3,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தவிர, 2010ஆம் ஆண்டு செரீனாவுடன் இணைந்து இரட்டையர் போட்டி ஒன்றில் பங்கேற்றபின் அதே குற்றச்சாட்டுக்காக 4,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago