Shanmugan Murugavel / 2016 மே 08 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
100 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் முன்னாள் உலகச் சம்பியனான அசாபா பவெல், இடம்பெற்ற ஜமைக்க சர்வதேச அழைப்புத் தொடரில், 200 மீற்றர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார்.
இந்தத் தூரத்தை 20.45 செக்கன்களில் ஓடிமுடித்த அவர், 20.52 செக்கன்களில் ஓடி முடித்த அமெரிக்கரான பெஜீ லீ, ஜமைக்கரான றஷீட் டுவையர் இருவரையும் முந்திக் கொண்டே, முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தார். எனினும், இந்த 200 மீற்றர் ஓட்டத்தை அவர், கற்கும் அனுபவம் என விளித்தார்.
'உண்மையாக, 200 மீற்றர் ஓட்டத்தில் எவ்வாறு ஓடுவதென்பதே எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆகவே, இது முன்னேறிக் கொண்டிருக்கும் ஒன்று" என்றார். அத்தோடு, போட்டியில் முதல் 150 மீற்றர்களிலும் சிறப்பாக உணர்ந்ததாகவும், ஆனால் இறுதி 50 மீற்றர்களில் களைப்பாக உணர்ந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில், உலக சம்பியன்ஷிப் பதக்க வெற்றியாளரான பஹாமாவின் ஷோனே மில்லர், 22.14 செக்கன்களில் ஓடிமுடித்து, முதலிடத்தைப் பெற்றார். இரண்டாவது இடத்தில், அனிஷா மக்லாப்ளின்-வில்பி, 22.79 செக்கன்களுடன் காணப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .