2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

வீரர்களிடமே குற்றம்: றூணி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் அண்மைக்கால மோசமான பெறுபேறுகளுக்கான விமர்சனங்கள், அணியின் முகாமையாளர் லூயிஸ் வான் கால் மீதே காணப்படும் நிலையில், வீரர்கள் அதிலிருந்து தப்பிவிட்டார் என, அவ்வணியின் தலைவர் வெய்ன் றூணி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரயிறுதியில், சண்டர்லான்ட் அணியுடன் தோல்வியடைந்த மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதிபெறுவதற்கான முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கு, 6 ஆறு புள்ளிகள் பின்தங்கிக் காணப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றூணி, 'இது, மிகவும் சிறந்த வீரர்களின் குழு. போதிய திறமையை நாங்கள் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது, சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'உண்மையில், சில திறமை வெளிப்பாடுகளுக்காக, முகாமையாளரே அதிக விமர்சனங்களைச் சந்தித்துள்ளார். உண்மையில், நாங்களே பொறுப்பு. நாங்களே வீரர்கள், நாங்களே திறமை வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.
'இந்தப் பருவகாலத்தில், நாங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அந்த வகையில், எங்கள் மீது குறைவான விமர்சனங்கள் காணப்பட, முகாமையாளர் மீது அதிகமானவை முன்வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .