Editorial / 2019 ஒக்டோபர் 30 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக மகமதுல்லா, டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக மொமினுல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக இருந்த ஷகிப் அல் ஹஸன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே குறித்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான கோவையை மீறிய மூன்று குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்தே ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது உள்ளடங்கலான இரண்டு ஆண்டுத் தடையை ஷகிப் எதிர்கொண்டுள்ளார்.
அந்தவகையில், இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில் ஷகிப்பை சுழற்பந்துவீச்சாளர் தஜியுல் இஸ்லாம் பிரதியிடுகிறார்.
இதேவேளை, காயம் காரணமாக இத்தொடரை தவற விட்ட சகலதுறைவீரர் மொஹமட் சைபுடீனை அபு ஹைதர் பிரதியிடுகிறார். தவிர, தனது இரண்டாவது பிள்ளையின் பிறப்புக்காக தொடரைத் தவறவிடுகின்ற தமிம் இக்பாலுக்குப் பதிலாக மொஹமட் மிதுன் குழாமில் இடம்பெற்றுள்ளார். முன்னதாக தமிமை இம்ருல் கைஸ் பிரதியிட்டுள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் குழாமில் கைஸ் இடம்பெற்றுள்ளதுடன், முஸ்தபிசூர் ரஹ்மான், அல்-அமின் ஹொஸைன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, முதற்தடவையாக பங்களாதேஷ் குழாமில் துடுப்பாட்டவீரர் சைஃப் ஹஸன் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் குழாமில் இடம்பெறவில்லை.
டெஸ்ட் குழாம்: ஷட்மன் இஸ்லம், இம்ருல் கைஸ், சைஃப் ஹஸன், மொமினுல் ஹக் (அணித்தலைவர்), லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம், மகதுல்லா, மொஹமட் மிதுன், மொஷாடெக் ஹொஸைன், மெஹிடி ஹஸன், தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன், முஸ்தபிசூர் ரஹ்மான், அல்-அமின் ஹொஸைன், அபு ஜயெட், எபடட் ஹொஸைன்.
இ-20. ச.போ குழாம்: மகமதுல்லா (அணித்தலைவர்), லிட்டன் தாஸ், செளமியா சர்க்கார், மொஹமட் நைம், முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொஸைன், மொஷாடெக் ஹொஸைன், அமினுல் இஸ்லாம், அரபாத் சணி, அல்-அமின் ஹொஸைன், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷஃபிகுல் இஸ்லாம், மொஹமட் மிதுன், தஜியுல் இஸ்லாம், அபு ஹைதர்.
இதேவேளை, கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்தியா, பங்களாதேஷிடையேயான இரண்டாவது டெஸ்டை பகலிரவுப் போட்டியாக விளையாடும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கோரிக்கைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026