Shanmugan Murugavel / 2016 மே 15 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணிக்காக தனது இறுதி லீக் போட்டியில், நன்டேஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவ்வணியின் நட்சத்திர வீரர் ஸல்டான் இப்ராஹிமோவிக் மேலுமொரு சாதனையைப் படைத்துள்ளார்.
4-0 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணி வெற்றி பெற்ற இப்போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்த ஸல்டான் இப்ராஹிமோவிக், இவற்றுடன் சேர்த்து, இந்த லீக் பருவகாலத்தில் 38 கோல்களைப் பெற்று, அவ்வணி சார்பாக லீக் பருவகாலமொன்றில் அதிக கோல்களை 1977-78 பருவகாலத்தில் கார்லோஸ் பியாஞ்சியின் 37 கோல் சாதனையை முறியடித்தார்.
மர்செய்லி அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள பிரஞ்சுக் கிண்ண இறுதிப் போட்டியுடன் பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணியிலிருந்து விலகும் ஸல்டான் இப்ராஹிமோவிக்காக, அவரின் சீருடை இலக்கமான 10ஐ குறிக்கும் பொருட்டு 10ஆவது நிமிடத்தில் போட்டி நிறுத்தப்பட்டு, ரசிகர்கள், எழுந்து நின்று மரியாதை செலுதியிருந்தனர்.
34 வயதான சுவீடன் நாட்டு வீரரான ஸல்டான் இப்ராஹிமோவிக், பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணிக்காக நான்கு வருடங்களில் 179 போட்டிகளில் பங்குபற்றி 154 கோல்களைப் பெற்றிருந்ததோடு, அவர் இருந்த ஒவ்வொரு பருவகாலங்களிலும் லீக் பட்டத்தை பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் வென்றிருந்தது.
6 minute ago
11 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
20 minute ago