Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், அலாவேஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றதோடு, அலாவேஸ் சார்பாகப் பெற்ற கோலை லூயிஸ் றியோஜா பெற்றார்.
இதேவேளை, அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் செவில்லாவுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செவில்லா தோல்வியடைந்தது. செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசெஃப் என்-நெஸ்ரி பெற்றதோடு, அத்லெட்டிக் பில்பாவோ சார்பாக இகர் முனியனின், ஒய்ஹன் சஞ்செட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஹுயெஸ்காவுக்குமிடையிலான போட்டியில் அவ்வணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா இரண்டு கோல்களையும், ஈடின் ஹஸார்ட், பெடெரிக்கோ வல்வேர்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஹுயெஸ்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிட் பெரைரோ பெற்றிருந்தார்.
இதேவேளை, ஒஸஸுனாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ சார்பாக, ஜோவா பீலிக்ஸ் இரண்டு கோல்களையும், லூகாஸ் டொரைரா ஒரு கோலையும் பெற்றனர். ஒஸஸுனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டே புடுமிர் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
38 minute ago