Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரஷ்யாவில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பெய்ன், இத்தாலி, அயர்லாந்துக் குடியரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் வென்றுள்ளன.
ஸ்பெய்ன், 1-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை வென்றது. ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஸியர் இயாராமென்டி பெற்றார். அந்தவகையில், தமது தகுதிகாண் குழுவில் முதலிடத்தை பெறுவதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்த ஸ்பெய்ன், தமது தகுதிகாண் போட்டிகள் எவற்றிலும் தோற்காது, தகுதிகாண் போட்டிகளை முடித்து, உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுக் கொண்டது.
இத்தாலி, 1-0 என்ற கோல் கணக்கில் அல்பானியாவை வென்றது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனியா கன்ட்ரேவா பெற்றார். அந்தவகையில், தமது தகுதிகாண் குழுவில் ஸ்பெய்னுக்கு அடுத்ததாக, இரண்டாமிடத்தை ஏற்கெனவே உறுதிப்படுத்திய இத்தாலி, உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளது.
அயர்லாந்துக் குடியரசு, 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வென்றது. அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் மச்சீன் பெற்றார். அந்தவகையில், இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் தமது தகுதிகாண் குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்ற அயர்லாந்துக் குடியரசு, உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, 2-0 என்ற கோல் கணக்கில், கொஸோவாவை வென்ற ஐஸ்லாந்து, தமது தகுதிகாண் குழுவில் முதலிடத்தைப் பெற்று, உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறும் உலகின் மிகச் சிறிய நாடு என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. ஐஸ்லாந்து, ஏறத்தாழ 335,000 பேரையே சனத்தொகையாக கொண்டுள்ளது. ஐஸ்லாந்து சார்பாக, ஜைல்பி சிகோர்ட்ஸன், ஜொஹன் குட்முண்ட்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026