2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹோல் ஒஃப் பேமில் சங்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 14 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஹோல் ஒஃப் பேமில், இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான குமார் சங்கக்கார உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக, இந்த ஹோல் ஓஃப் பேமில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டாவது இலங்கையராக சங்கக்கார மாறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற சங்கக்கார, 134 டெஸ்ட் போட்டிகளில், 57.40 என்ற சராசரியில் 12,400 ஓட்டங்களைப் பெற்றதுடன், 404 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 41.98 என்ற சராசரியில் 14,234 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, சங்ககாரவுடன் சிம்பாப்வேயின் முன்னாள் அணித் தலைவரான அன்டி பிளவரும் ஹோல் ஒஃப் பேமில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .