Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்டநிர்ணயத்தில் தொடர்புபட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி வீரரின் பெயர் இதுவரை வெளியிடப்பட்டிருக்காத போதும், கடந்த மாதம் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இடைத்தரகராக செயற்பட்ட அதே வீரரே இவர் என்று கூறப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான ராம் ஸ்லாம் இருபதுக்கு-20 சவாலிலேயே மேற்படி ஆட்ட நிர்ணய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை விடுத்த அறிக்கையில், தனது ஊழலுக்கெதிரான கோவையின் கீழ், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட முனைந்தமை அல்லது தவறான முறையில் 2014-15 உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் தாக்கம் செலுத்த முயன்றமை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, மேற்படி முயற்சி தொடர்பாக அறிவிக்காத ஏனைய வீரர்கள் குறைந்தபட்ச தண்டனையை எதிர்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான கோவையின் படி, மேற்படிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
35 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
55 minute ago
2 hours ago