2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஆமிருக்கு ரமீஸ் ராஜா எதிர்ப்பு: மக்கலம் ஆதரவு

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆமிர் விடயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அவசரப்பட்டு விட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நேர்முக வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

'இதுவோர் இக்கட்டான நிலையாகும், ஏனெனில், வெற்றிபெற அவர்கள் (பாகிஸ்தான் கிரிக்கெட் சபை) விரும்புகிறார்கள். அத்தோடு, அந்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியவராக, ஆமிர் பார்க்கப்படுகிறார். அவரிடம் ஏராளமான திறமையும் திறனும் உள்ளது. அது எப்போதுமே சந்தேகமாக இருந்ததில்லை" எனத் தெரிவித்தார்.
'ஆனால், அவரை அணிக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், அவசரப்பட்ட நடவடிக்கைகள் தான். முழுக் குழாமுமே அதை ஏற்றுக் கொள்வதற்குக் காலத்தை அவர்கள் வழங்கியிருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்" என்றார்.

எனினும், தங்களுக்கெதிராக விளையாடுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மொஹமட் ஆமிர் தொடர்பாக, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், தனது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். அச்சம்பவம் இடம்பெற்றபோது, ஆமிர் மிகவும் இளையவர் எனத் தெரிவித்த அவர், மிகவும் சிறப்பான புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .