Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றுமா என்பது, சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது. இரண்டு அணிகளுமே, வெவ்வேறான காரணங்களுக்கான இந்நிலையை எதிர்கொண்டுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினை காரணமாகவே, அவ்வணியின் பங்குபற்றுகை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. உலக இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் வழங்கப்படும் தொகையில், வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 25 சதவீதத்திலிருந்து, தற்போது, 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, அணித்தலைவர் டெரன் சமி குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு, இவ்விவகாரத்தை உடனடியாகத் தீர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், உலக இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகுவதாக டெரன் சமி நேரடியாகத் தெரிவிக்காத போதிலும், அணியின் வீரர்கள் சிலர், அவ்வாறான கொள்கையைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவில் இடம்பெறும் இத்தொடரில் பங்குபற்றுவதற்காக, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் அனுமதியைக் கோரியுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த அனுமதி கிடைக்காது என்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான அரசியல் முரண்பாடுகள் காரணமாக, இருநாடுகளுக்குமிடையிலான கிரிக்கெட் உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .