Shanmugan Murugavel / 2016 மார்ச் 01 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக உள்ளக 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பெண்கள் பிரிவின் சம்பியனான எதியோப்பியாவில் பிறந்த அபேபா அரேகவி, ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
25 வயதான அவர், சர்வதேசப் போட்டிகளில் சுவீடனைப் பிரதிநிதித்துவம் செய்துவருகிறார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எதியோப்பியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், அவ்வாண்டில், சுவீடன் பிரஜாவுரிமை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சுவீடனுக்காக ஓடி வருகிறார்.
2013ஆம் ஆண்டு மொஸ்கோவில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப்ஸில் தங்கம் வென்ற அவர், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக உள்ளக சம்பியன்ஷிப் தொடரிலும் சம்பியனாகியிருந்தார். எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, ஊக்கமருந்துச் சோதனையில் அவர் தோல்வியடைந்திருந்தார்
இதேவேளை, எதியோப்பியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர்கள் ஒன்பது பேர், ஊக்கமருந்துப் பயன்பாடு தொடர்பான சந்தேகத்தில் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதை, அந்நாட்டு தடகளச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது கருத்தின்படி, இவ்வாறு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் 9 பேரில் ஐந்து பேர், எதியோப்பியாவின் முன்னணி வீரர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .