Shanmugan Murugavel / 2016 ஜனவரி 11 , மு.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் எஃப்.ஏ கிண்ணப் போட்டிகளில் செல்சி, ஒக்ஸ்போர்ட் யுனைட்டெட், ஷ்ரூஸ்பியூரி ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், லெய்செஸ்டர், டொட்டென்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டியும் கார்லிஸ்லே, யோவில் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இவ்வணிகளுக்கிடையிலான போட்டிகள் மீளவும் நடைபெறவுள்ளன.
செல்சி, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் லீக் ஒன்று அணியான ஸ்குன்தோர்ப்பை, 2-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து நான்காவது சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் டியகோ கோஸ்டா 13ஆவது நிமிடத்திலும் ருபேன் லொஃப்டஸ்-சீக் 68ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
லெய்செஸ்டர், டொட்டென்ஹாம் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சுற்றுப் போட்டியில், டொட்டென்ஹாம் அணியின் ஹரி கேன் 89ஆவது நிமிடத்தில், சர்ச்சைக்குரிய பெனால்டி மூலமாக, 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், மீண்டும் இப்போட்டி நடைபெறவுள்ளது. டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன் தவிர, கிறிஸ்டியன் எரிக்சன் கோலைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாக மர்சின் வசிலெவ்ஸ்கி, ஷிஞ்சி ஒகசகி ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இடம்பெற்ற ஏனைய போட்டிகளில் லீக் இரண்டு அணியான ஒக்ஸ்போர்ட் யுனைட்டெட், பிறீமியர் லீக் அணியான சுவான்சீயை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததோடு, ஷ்ரூஸ்பியூரி, 1-0 என்ற கோல் கணக்கில் கார்டிப்பை தோற்கடித்ததோடு, கார்லிஸ்லே யுனைட்டெட், யோவில் அணிகளுக்கிடையிலான போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையாகியிருந்தது.
6 minute ago
11 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
20 minute ago