Shanmugan Murugavel / 2016 ஜனவரி 20 , மு.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டுக்கான மெரிலிபோன் கிரிக்கெட் கழக(எம்.சி.சி) கிரிக்கெட்டின் உணர்வுக்கான விரிவுரையை, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் ஆற்றவுள்ளார். எம்.சி.சி-இன் தலைமையகமான லோர்ட்ஸ் மைதானத்தில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்த உரை இடம்பெறவுள்ளது.
2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எம்.சி.சி உரை, றிச்சி பனர், தெஸ்மொன்ட் துட்டு, இம்ரான் கான், குமார் சங்கக்கார, மார்ட்டின் குரோ, இயன் பொத்தம் ஆகியோரால், இதற்கு முன்னர் ஆற்றப்பட்டிருந்தது.
விரைவில் ஓய்வுபெறவுள்ள பிரென்டன் மக்கலம், நியூசிலாந்து அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அவ்வணியைப் பலமான அணிகளுள் ஒன்றாக மாற்றினார் எனப் புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago