Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணியின் தலைவரும் ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திரவீரருமான நேமரின் சொத்துக்களை பிரேசிலுள்ள நீதிமன்றமொன்று முடக்கியுள்ளது.
பிரேசிலின் சா போலோவிலுள்ள மத்திய நீதிமன்றமொன்றே, 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான நேமரின் சொத்துக்களை முடக்குவதற்கான ஆணையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி முடக்கப்பட்ட சொத்துக்களில், ஒரு சொகுசுப் படகு, ஒரு விமானம், மேலும் சில சொத்துக்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், வரி செலுத்துவதிலிருந்து தப்பித்தார் என 23 வயதான நேமரின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, அவர் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். எனினும் தான் தவறேதும் செய்யவில்லை என நேமர் மறுத்துள்ளார்.
முடக்கப்பட்ட சொத்துக்களில், அவரது குடும்பத்துக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. குறைந்தளவிலான வரியைச் செலுத்தும் பொருட்டு, நேமர், நிறுவனங்களை உருவாக்கியிருந்ததாக வழக்குத் தொடருநர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
30 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
50 minute ago
2 hours ago