Shanmugan Murugavel / 2016 மார்ச் 07 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு, அதன் தற்போதைய தலைவர் லசித் மலிங்க விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரான திலங்க சுமதிபால உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்கால உபாதைகளால் அவதிப்பட்டுவரும் லசித் மலிங்க, அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக, கடந்தாண்டு நவம்பருக்குப் பின்னர், ஒரேயொரு போட்டியில் மாத்திரம் பங்குபற்றியுள்ளார். அது, ஆசியக்கிண்ணப் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியாகும்.
அதன் பின்னர், உபாதை காரணமாகப் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத லசித் மலிங்க, அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் விண்ணப்பித்துள்ளார் என்ற தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார்.
லசித் மலிங்கவின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமாயின், புதிய தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், டினேஷ் சந்திமாலுக்கும் வாய்ப்புக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடப்புச் சம்பியன்களாக இலங்கை அணி, கடந்த முறை உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட போது, இலங்கை அணிக்கு, லசித் மலிங்கவே தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026