2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

'முன்னமே விளையாடவிருந்தார் வில்லியம்சன்'

Shanmugan Murugavel   / 2016 மே 01 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன், இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி சார்பாக, தொடரின் ஆரம்பத்திலிருந்தே விளையாடவிருந்ததாக, அவ்வணியின் தலைவர் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார்.

ஓர் அணி சார்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த 4 வீரர்கள் மாத்திரமே இத்தொடரில் பங்குபற்ற முடியுமென்ற நிலையில், அவ்வணியின் முதல் 6 போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருக்கவில்லை. 7ஆவது போட்டியான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியிலேயே அவர் முதன்முறையாகக் களமிறங்கியிருந்தார்.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, டேவிட் வோணரின் 92 (50), கேன் வில்லியம்சனின் 50 (38), மொய்ஸஸ் ஹென்றிக்கஸின் ஆட்டமிழக்காத 31 (14) ஓட்டங்களின் துணையோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய பெங்களூர் அணி சார்பாக லோகேஷ் ராகுல் 51 (28), ஏபி டி வில்லியர்ஸ் 47 (32) ஓட்டங்களைப் பெற்ற போதிலும், அவ்வணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இப்போட்டியில் முதலாவது விக்கெட்டை 28 ஓட்டங்களுக்கு இழந்த பின்னர் ஹைதரபாத் அணி, 2ஆவது விக்கெட்டுக்காக ஒன்றுசேர்ந்த டேவிட் வோணர், கேன் வில்லியம்ஸன் இருவரும் 124 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த டேவிட் வோணர், இத்தொடரின் ஆரம்பத்தில் வில்லியஸ்சனுக்குக் காயமேற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஒய்ன் மோர்கன் விளையாடியதாகவும் அவர் சிறப்பாக விளையாடியிருந்ததகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாமிலக்கத்தில் களமிறங்கும் கேன் வில்லியம்சன், அணியை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்தப் பணியை இப்போட்டியில் சிறப்பாகச் செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .