Shanmugan Murugavel / 2016 மே 01 , மு.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டேவிட் மில்லரின் துடுப்பாட்டத்தை, அவருக்கு வழங்கப்பட்ட அணித்தலைமைப் பொறுப்புப் பாதித்ததாக, அவ்வணியின் பயிற்றுநர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணி சார்பாக 6 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியிருந்த டேவிட் மில்லர், 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். இதனையடுத்தே, அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டு, அணியின் தலைவராக முரளி விஜய் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், 'அணித்தலைமைப் பொறுப்பு என்ற மேலதிக பொறுப்புக் காரணமாக, டேவிட் மில்லரின் துடுப்பாட்டம் பாதிப்படைகிறது என நாம் எண்ணினோம். மேலதிக பொறுப்பிலிருந்து அவரை விடுவிப்பதே நோக்கமாகும். துடுப்பாட்டத்தின் மூலமான அவரது பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்கிறோம்" என்றார்.
முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் அணி, தடுமாறியதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட முடிவை, அவர் சிறந்த முறையில் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்த சஞ்சய் பங்கர், இந்த மாற்றத்தால், அணியின் ஒற்றுமை பாதிப்படையாது எனவும் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago