2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

தென் ஆபிரிக்க அணி உலக 20-20 அரை இறுதியில்

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்க அணி உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில்  இங்கிலாந்து அணியை வென்றதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதேவேளை இங்கிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. தென் ஆபிரிக்க அணி குழு 01 இல் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி, குழு 01 இல் இருந்து இரண்டாவது அணியாக தெரிவாகும். இந்த இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள போட்டி கைவிடப்படாதவிடத்து தென் ஆபிரிக்க அணி குழு 01 இல் முதலிடத்தைப் பெற முடியாது. இலங்கை அல்லது நியூசிலாந்து அணிக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும்.

தென் ஆபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்க அணி 2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. இதில் AB DE வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 69(28 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றார். ஹாசிம் அம்லா 56(37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றார். குயின்டன் டி கொக் 29 (33 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரிம் பிரஸ்னன், கிறிஸ் ஜோர்டான், ஜேம்ஸ் ற்றெட்வெல், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அலெக்ஸ் ஹேல் 38 (22 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஜோஸ் பட்லர் 34 (24 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரவி போபரா 31(18 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வெயின் பார்னல் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இம்ரான் தாகிர் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.

போட்டியின் நாயகனாக AB DE வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார். தென் ஆபிரிக்க அணி இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளைப் பெற்று குழு 01 இல் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .