2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இலங்கை, இங்கிலாந்து டுவென்டி 20 இன்று

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை- இங்கிலாந்து  அணிகளுக்கிடையிலான ஒற்றை டுவென்டி 20 போட்டி இன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலக டுவென்டி 20 தொடருக்கு பின்னர் நடைபெறும் முதலாவது டுவென்டி 20 போட்டி இது என்பது குறிப்பிடத்தகது. த ஓவல் மைதனத்தில் இன்று இலங்கை நேரப்படி இரவு 10.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. உலக சம்பியன் இலங்கையிடம் இங்கிலாந்து பல சோதனைகளை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல பிரச்சினைகளின் பின்னர் பல மாற்றங்களுடன் புதிய அணியாக களமிறங்குகின்றது இங்கிலாந்து அணி. இலங்கை அணி அவர்களின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களும், இங்கிலாந்து ஆடுகளம் பற்றி நன்கு அறிந்தவர்களுமான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன இன்றி களமிறங்கவுள்ளது. இவர்கள் இருவரினது உதவி இலங்கை அணித் தலைவர்களுக்கு சாதாரணமாக கிடைப்பது வழமை. அவர்கள் இல்லாதது இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்கவிற்கு சோதனையாக அமைய வாய்ப்புகள் உள்ளன. அதை வென்று தனது தலைமை பொறுப்பை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

உலக டுவென்டி 20 தொடரில் இருந்து விலகிக் கொண்ட தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை கீத்ருவான் விதானகே, சத்துரங்க டி சில்வா, அஷான் பிரியரஞ்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டு டுவென்டி 20 போட்டிகளிலும் இலங்கை அணியானது இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை உலக டுவென்டி 20 தொடரில் இலங்கை அணியானது இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X