2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: 9ஆவது நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 21 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில், கொஸ்டரிக்கா அணி, 1 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 44ஆவது நிமிடத்தில் பிரையன் ரூயிஸ் அடித்த கோல் மூலமாக கொஸ்டரிக்கா அணி போட்டியில் முன்னிலையைப் பெற்றது. குழு D இல் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ள நிலையில் இத்தாலி, உருகுவே அணிகளில் ஒன்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். இரு அணிகளுக்குமான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளும் அணி, அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை, இத்தாலி அணி ஏற்கெனவே புள்ளி வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் இருப்பதனால், அடுத்த போட்டியில் சமநிலை முடிவே அவர்களுக்கு போதுமானது. 

குழு E இற்கான போட்டி, பிரான்ஸ் - சுவி்ட்சர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி, 5 இற்கு 2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இரண்ட்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. ஒலிவர் ஜிரோட் 17ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், ப்லசி மட்டுடி 18ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், வல்புனா 40ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும், கரீம் பென்சீமா 67ஆவது நிமிடத்தில் நான்காவது கோலையும், சிசிகோ 73ஆவது நிமிடத்தில் ஐந்தாவது கோலையும் - பிரான்ஸ் அணி சார்பாக அடித்தனர். சுவிட்சர்லாந்து அணி சார்பாக செமாலி, ஷகா ஆகியோர் 81 மற்றும் 87ஆவது நிமிடங்களில் கோல்களை அடித்தனர். கறீம் பென்சீமா போட்டியின் நாயகனாக தெரிவானார்.

எக்குவாடர் - ஹொண்டியுராஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், எக்குவாடர் அணி 2 இற்கு 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று, தமக்கான அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இருபினும் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஹொண்டியுராஸ் அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஹொண்டியுராஸ் அணியின் வீரர் கார்லோ கோஸ்ட்லி 31ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். எக்குவாடர் அணியின் என்னர் வல்ன்சியா 34 மற்றும் 65ஆவது நிமிடங்களில் தனது அணிக்கான கோல்களை அடித்தார். போட்டியின் நாயகனாக அவரே தெரிவு செய்யப்பட்டார்.

குழு E இல் எக்குவாடர், சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். எக்குவாடர் அணிக்கு சமநிலை முடிவு அடுத்த சுற்றுக்கு தெரிவாக போதுமானது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X