Editorial / 2025 ஜூலை 15 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார்.
ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரும், மீள்தன்மை மற்றும் நம்பிக்கையின் நீடித்த அடையாளமுமான சர்தார் ஃபவுஜா சிங்கின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
114 வயதிலும், அவர் தனது வலிமை மற்றும் அர்ப்பணிப்பால் இளம் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். 2024 டிசம்பரில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான பியாஸிலிருந்து இரண்டு நாள் 'நாஷா முக்த் - ரங்லா பஞ்சாப்' அணிவகுப்பின் போது அவருடன் நடந்து செல்லும் பெருமை எனக்குக் கிடைத்தது” என்று அவர் தெரிவித்தார்.
5 minute ago
52 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
52 minute ago
8 hours ago