Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டு நகரில் இன்று (27) காலை தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என முடிவு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 233 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 234 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியில் ஆரம்பத்தில் இருந்து ஓட்டங்கள் சேர்க்க வீரர்கள் தவறி விட்டனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த போட்டி எதிர்வரும் புதன்கிழமை பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago