2025 மே 20, செவ்வாய்க்கிழமை

148 ஓட்டங்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 15 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 148 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் சுருண்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கராச்சியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 505 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, 9 விக்கெட்டுகளை இழந்து 556 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இனிங்ஸை இடைநிறுத்தியது.

அப்போது களத்தில், அணித்தலைவர் பற் கமின்ஸ் 34, மிற்செல் ஸ்வப்ஸன் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர். முன்னதாக, உஸ்மான் கவாஜா 160, அலெக்ஸ் கெரி 93, ஸ்டீவ் ஸ்மித் 72, நேதன் லையன் 38, டேவிட் வோர்னர் 36, கமரொன் கிறீன் 28, மிற்செல் ஸ்டார் 28, ட்ரெவிஸ் ஹெட் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில், பாஹீம் அஷ்ரஃப் 2, சஜிட் கான் 2, அணித்தலைவர் பாபர் அஸாம் 1, நெளமன் அலி 1, ஹஸன் அலி 1, ஷகீன் ஷா அஃப்ரிடி 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவின் அபார களத்தடுப்பு, பந்துவீச்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் 36, இமாம்-உல்-ஹக் 20, நெளமன் அலி ஆட்டமிழக்காமல் 20, ஷகீன் ஷா அஃப்ரிடி 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 3, மிற்செல் ஸ்வப்ஸன் 2, நேதன் லையன் 1, கமரொன் கிறீன் 1, பற் கமின்ஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா, நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், உஸ்மான் கவாஜா 35, மர்னுஸ் லபுஷைன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஹஸன் அலி கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X