2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

2 முறைகள் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு மீளத் திருத்தல்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் முதற்தரப் போட்டித் தொடரான ஷெஃபீல் ஷீல்டில், மேற்கு அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்ட்யின்போது நியூ சவுத் வேல்ஸின் கிறிஸ் கிறீனுக்கு இரண்டு தடவைகள் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு பின்னர் களத்துக்குத் திரும்பியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் இரண்டாவது இனிங்ஸின் 22ஆவது ஓவரில் மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்தியூ கெல்லி வீசிய பவுன்சருக்கு கிறீன் கீழே குனிந்தபோது துடுப்பில் பந்து பட்டு விக்கெட் காப்பாளர் ஜோயல் கேர்ட்டிஸிடம் சென்றதாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது.

கீழி வீழ்ந்த கிறீன் நடுவருடன் முரண்பட்டபோது ஆட்டமிழப்பு வழங்கப்பட்டதுடன், எழும்பிய கிறீன் தொடர்ந்து தலையை இல்லை என அசைத்துள்ளார். பின்னர் மற்றைய நடுவர் மிஷெல் கிரஹாம்-ஸ்மித்துடன் கலந்தாலோசித்து மீண்டும் நடுவர் ஜெரார்ட் அபூட் ஆட்டமிழப்பென கையை உயர்த்தியுள்ளார்.

முன்னாலான, பின்னாலா காணொளிகள் தெளிவில்லாமலிருந்த நிலையில், பக்கவாட்டான காணொளியில் பந்து தலைக்கவசத்தில் பட்டதென காண்பித்திருந்தது. மிட் ஒன்னிலிருந்தான காணொளியில் இது உறுதியாக கிறீனை மைதானத்திலிருந்து வெளியேற வேண்டாமென சைகை செய்த நடுவர், மேற்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் சாம் வைட்மானை அணுகியிருந்தார். பின்னர் தனது முடிவை நடுவர் மாற்றிய நிலையில் கிறீன் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .