Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பினால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுக்குள்ளானார்.
வட மாகாண விளையாட்டத் தினைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாவட்ட அணிகளுக்கு இடையேயான கால்பந்தாட்டத் தொடரில் கிளி;நொச்சி - வவுனியா அணிகளுக்கிடையிலான போட்டியின்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் மன்னார் மாவட்ட அணி இரண்டு கோல்களை அடித்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் இடம் பெற்ற வேளையில் மன்னார் மாவட்ட அணி வீரர் ஒருவர் நிலத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து மன்னார் வீரருக்கும் கிளிநொச்சி மாவட்ட வீரர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதானத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
அதன்பின் கிளிநொச்சி அணி சுற்றுப்போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் மன்னார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவு அணியை வவுனியா மாவட்ட அணி 2-1 கோல்களால் வென்றது. இச்சுற்றுப்போட்டி நாளை புதன்கிழமை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
34 minute ago
35 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
55 minute ago