2021 மே 06, வியாழக்கிழமை

இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றி

A.P.Mathan   / 2014 மார்ச் 23 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் 8 விக்கெட்களினால் இந்தியா அணியானது மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப்  போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்றிஸ் கெயில் 34 ஓட்டங்களையும், லென்டி சிம்மொன்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களையும், அமித் மிஷ்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 130 ஓட்டங்களைப் வெற்றி பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், விராத் கோலி 54 ஓட்டங்களையும், பெற்றனர். போட்டியின் நாயகனாக அமித் மிஷ்ரா தெரிவு செய்யபட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .