Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
விராத் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி. மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அம்பாத்தி ராயுடு 35(37 பந்துகள், 4 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், கூரே அன்டர்சன் 18 (19 பந்துகள் , 4 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், வருண் ஆரோன், யுஸ்வேந்தரா சஹால் 2 விக்கெட்களை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பார்த்திவ் பட்டேல் ஆட்டமிழக்காமல் 57 (45 பந்துகள், 4 ஓட்டங்கள் 7) ஓட்டங்களையும், AB DE வில்லியர்ஸ் 45 (48 பந்துகள், 4 ஓட்டங்கள் 3 , 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றானர். பந்துவீச்சில் சகீர் கான் இரண்டு விக்கெட்களையும், லசித் மாலிங்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக பார்த்திவ் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார். இது பெங்களூரு அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.
16 minute ago
31 minute ago
39 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
39 minute ago
59 minute ago