2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கால்பந்தில் கங்குலி

A.P.Mathan   / 2014 மே 08 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் போன்ற ஒரு கால்பந்தாட்ட தொடரை இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. 8 அணிகள் பங்கு பற்றும் இந்த தொடர் இந்தியன் சுப்பர் லீக் தொடர் என பெயரிடப்பட்டுள்ளது. 8 அணிகளில் கொல்கொத்தா மாநில அணி தன்னுடைய அணியை முதலில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்பானிய கழகமான அட்லட்டிக்கா டி மாட்ரிட் கழகம்,  கொல்கொத்தா அணியின் பிரதான உரிமையை பெற்றுள்ளது. கொல்கொத்தாவின் முன்னணி மூன்று தொழிலதிபர்கள் இந்த அணியின் இணை உரிமையைப் பெற்றுள்ள அதேவேளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியும் இதில் உரிமையைப் பெற்றுள்ளார். இந்த அணி அட்லட்டிக்கா டி கொல்கொத்தா என பெயரிடப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் அட்லட்டிக்கா டி மாட்ரிட் கழகத்தின் உரிமையாளர் மிகுல் எஞ்சல் கில் மரின் கலந்து கொண்ட அதேவேளை அணியின் இணை உரிமையாளர்களும் சௌரவ் கங்குலியும் கலந்து கொண்டனர். இந்தியா கால்பந்தாட்டத்தின் முக்கிய நகரமாக கொல்கொத்த திகழ்ந்த்தது. மீண்டும் அதை நிலைநாட்ட தொடர்ந்து வெற்றிகளை பெறுவோம் என சௌரவ் கங்குலி ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார்.

சௌரவ் கங்குலி, கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பதற்கு முன்னர் கால்பந்தை சிறு வயதில் விளையாடியவர் என்பதும் கொல்கொத்தா அணியின் 13 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை சச்சின் டெண்டுல்கார், கொச்சி அணியின் உரிமையை வாங்குவார் என்ற செய்தி ஆரம்பத்தில் வெளியாகி இருந்த போதும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .