2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கொல்கொத்தா அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் விரேந்தர் செவாக் 50 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள், 1 ஆறு ஓட்டம் அடங்கலாக 72 ஓட்டங்களையும், ரிதிமன் சஹா 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பியுஸ் சவ்லா 3 விக்கெட்களையும், மோர்னி மோர்க்கல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 18 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெளதம் கம்பீர் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக  63 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 28 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள், 1 ஆறு ஓட்டம் அடங்கலாக 46 ஓட்டங்களையும், மானிஸ் பாண்டி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக கெளதம் கம்பீர் தெரிவானார். 

இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி விளையாடிய   9 போட்டிகளில் நான்காவது வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 9 போட்டிகளில் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ள போதும் 14 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X