A.P.Mathan / 2014 மே 12 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முஸ்டாக் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இவர் இங்கிலாந்து அணியின் சுழல்ப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் குறித்த பதவிக்கு சக்லைன் முஸ்டாக், முஸ்டாக் அஹமட் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவி வந்தது. இருப்பினும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர் தெரிவுக்குழு முஸ்டாக் அகமட்டை, தலைமைப் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுசுக்கு பரிந்துரை செய்தது. வக்கார் யூனுஸ் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். வக்கார் யூனுஸ், முஸ்டாக் அஹமட் ஆகியோர் சம காலத்தில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago